ராமேஸ்வரம் கோயிலில்ஆடித் திருக்கல்யாண விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூலை 2012 10:07
ராமேஸ்வரம்: ரமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித்திருக்கல்யாண விழா, நேற்று கொடியேற்றுத்துடன் துவங்கியது. நேற்று காலை 9 மணிக்கு கொடிமரத்திற்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். காலை 9.45 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. ஜூலை 18ம் தேதி காலை 6 மணிக்கு ராமர் தங்க கருட வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. அன்று இரவு, ஆடி அமாவசையன்று அக்னி தீர்த்தக்கரையில் எழுந்தருளும் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 19ம் தேதி இரவு அம்பாள் வெள்ளிரத்தில் வீதி உலாவும், 21ம் தேதி காலை 10.35 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.ஜூலை 24ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடக்கிறது. 29ம் தேதி வரை நடக்கும் விழாவில், தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். ஏற்பாடுகளை தக்கார் குமரன்சேதுபதி, கோயில் இணை கமிஷனர் ஜெயராமன், உதவி கமிஷனர் கண்ணதாசன் செய்து வருகின்றனர்.