சித்தூர் : காளஹஸ்தி சிவன் கோயில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று திங்கட்கிழமை காலை காளஹஸ்தீஸ்வரர் அன்ன வாகனத்திலும் ஞானபிரசுனாம்பிகை தாயார் கிளி வாகனத்திலும் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து மங்கல வாத்தியங்கள்,மேள தாளங்களுடன் , பண்டரி பஜனைகள் மற்றும் இசைக் குழுவினர் வாகன சேவை நடைபெற்றது. முன்னதாக அலங்கார மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டதோடு கோயில் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகளும் செய்தனர் . தொடர்ந்து ஊர்வலமாக கொண்டு வந்து வாகனங்களில் அமர்த்தி னர். விநாயகர் , வள்ளி -தெய்வயானை சமேத சுப்ரமணியசுவாமி ,சண்டிகேஸ்வரர் ரத்த கண்ணப்பர் (பஞ்ச மூர்த்திகள்) நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பக்தர்கள் வழிநெடுகிலும் (4 மாட வீதிகளில்) கற்பூர ஆரத்தியை சமர்ப்பித்து சுவாமி தரிசனம் செய்தனர்.