அன்னூர்: வடுகபாளையம், சவுடேஸ்வரி அம்மன் கோவில், மகா சிவராத்திரி விழா நாளை நடக்கிறது. பச்சாபாளையம் அருகே வடுக பாளையத்தில், பழமையான சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவராத்திரி விழா நாளை நடக்கிறது. நாளை மாலை 5:00 மணிக்கு சௌடேஸ்வரி அம்மனுக்கு கொலு வைத்தல், இரவு படையல் பூஜை, பேச்சியம்மன் மற்றும் அங்காளம்மன் கோவிலில் இருந்து வீரமாத்தியம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 2ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு பள்ளய பூஜை, 6:00 மணிக்கு அபிஷேக, அலங்கார பூஜை, அமாவாசை பூஜை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை குலதெய்வ வழிபாட்டு குழுவினர் செய்து வருகின்றனர்.