பதிவு செய்த நாள்
16
ஜூலை
2012
10:07
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் மதுரை பகுதி கோயில்களுக்கு செல்ல, பெரியார் பஸ்ஸ்டாண்டு சென்று அங்கிருந்து வேறு பஸ்களில் செல்கின்றனர். இப்படி சுற்றியுள்ள பகுதி கோயில்களுக்குச் செல்ல பல பஸ்களை மாறி, மாறி செல்ல வேண்டியுள்ளது. இதற்கு பணம், நேரம் விரயமாகிறது. சர்க்குலர் பஸ்கள் திருப்பரங்குன்றத்தில் இருந்து மீனாட்சி அம்மன்கோயில், கூடலழகர் பெருமாள் கோயில், திருமாகூர் காளமேகப் பெருமாள் கோயில், அழகர் கோயில், பாண்டி கோயில், மடப்புரம் காளி கோயில்களுக்கு பக்தர்கள் வசதியாக செல்லும் வகையில், சர்க்குலர் பஸ்களை இயக்கலாம் என பக்தர்கள் விரும்புகின்றனர். திருப்பரங்குன்றத்தில் இருந்து வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பாண்டி கோயிலுக்கும், செவ்வாய், வெள்ளி கிழமைகளில் மடப்புரத்திற்கும், வியாழன், ஞாயிற்றுக் கிழமைகளில் குருவித்துறைக்கும், சனிக்கிழமைகளில் திருமோகூருக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கலாம்.மீண்டும் வருமா: திருப்பரங்குன்றத்தில் இருந்து பெரியார் பஸ் ஸ்டாண்டு, சிம்மக்கல், கோ.புதூர் வழியாக அழகர்கோயிலுக்கு இரண்டு பஸ்கள் இயக்கப்பட்டன. 2009முதல் திடீரென நிறுத்தப்பட்டு விட்டது. அந்த பஸ்களையும் இயக்கினால், பக்தர்களுக்கு கூடுதல் வசதி கிடைக்கும்.