நல்லதை சொல்லிக் கொடுங்கள்இறைநெறி பற்றி அறிந்து கொள்வதும், அவற்றைப் பிறருக்குச் சொல்லிக் கொடுப்பதும் மிகவும் அவசியம் என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.அவர்களது கருத்தைக் கேளுங்கள்.சிலர் தம் அண்டைவீட்டாரிடம் இறைநெறி பற்றிய அறிவைத் தோற்றுவிப்பதில்லை. மேலும், இறைநெறியை அவர்களுக்கு கற்று தருவதும் இல்லை. இறைநெறி குறித்து அறியாமல் இருந்தால், ஏற்படக்கூடிய படிப்பினையூட்டும் விளைவுகள் குறித்தும் அவர்களுக்கு உணர்த்துவதில்லை. இறைவன் மீது ஆணையாக! மக்கள் தம் அண்டைவீட்டாருக்கு அவசியம் இறைநெறியைக் கற்றுத்தர வேண்டும். இறைநெறியின் ஆழ்ந்த கருத்துக்களை அவர்களிடம் உருவாக்க வேண்டும். அவர்களுக்கு நல்லுபதேசம் செய்ய வேண்டும். நல்ல விஷயங்களை அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். தீயவற்றில் இருந்து அவர்களைத் தடுக்க வேண்டும். தம் அண்டை வீட்டாரிடமிருந்து இறைநெறியை அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும். இறைநெறி பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுடைய உபதேசங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல், விரைவில் அவர்களுக்கு நான் தண்டனை அளிப்பேன்,.இறைவனைப் பற்றிய பயம் எள்ளளவும் மக்களிடம் இல்லை. இதற்கு, இறைவனைப் பற்றி விஷயமறிந்தவர்கள் ஒதுங்கிக் கொள்வது தான் காரணம். எனவே, ஆன்மிக அறிவை வளர்த்துக் கொள்வதும், வளரச் செய்வதும் இன்றைக்கு அவசியக் கடமையாகிறது.