பதிவு செய்த நாள்
11
மார்
2022
11:03
பலவழியாலும் பணம் படைத்த ஒருவன் கோயிலில் திருவிழா செய்கின்றான். மூவாயிரம் ரூபாய்கள் செலவழிகின்றன. இந்த ரூபாய் நோட்டுகளைக் கயிற்றில் கோத்தா இறைவனுக்குச் சாத்துகின்றான்! இல்லை! சுவாமி துõக்குகின்றவனுக்கு 75, பூமாலை தொடுத்தவனுக்கு 300, திருமுறைகள் ஓதுவாருக்கு 200, விளக்குச் சுமப்பவர்கட்கு 75, குடை பிடிப்பவனுக்கு 50, மேளம் வாசிப்பவர்கட்கு 500, பந்தல் இட்டவனுக்கு 300, வறியவர்க்கு பிரசாதமாக 500, வேலை செய்பவர்க்குக் கூலியாக 200, வாணக்காரனுக்கு 200, விரிவுரை புரிபவருக்கு 300, அச்சிடுபவருக்கு 200, அபிஷேகத்துக்கு 100, சிற்றுண்டிகள் 400 என்று செலவழிகின்றன. இத்தனையும் வறியவர்க்குப் பயன்படுகின்றன. இது இல்லையானால் தனவந்தனுடைய பணம் அவன் பெட்டியில் துõங்கிக் கொண்டிருக்கும். வாண வேடிக்கையால் யாக்கை நிலையாமையைப் பாமர மக்கள் உணர்வார்கள். எனவே பெருந் தனவந்தனுடைய பணம் பல தொழிலாளர்களுக்குப் பயன்படுகின்றது. இதனால் திருவிழாவானலும் பல மக்கள் உண்டு கண்டு உவகையுறுகின்றார்கள். அன்பினால் இதனை நம் முன்னோர்கள் அமைத்தார்கள். ஆதலால் இது பயனற்றது என்று கூறுவது அறிவுடைமையாகாது. மேற்றிசையிலிருந்து கிழக்கே ஓடுவதற்கு நதி என்று பேர். கிழக்கேயிருந்து மேற்கே ஓடுவதற்கு நதம் என்று பேர்.