தென்காசி:தென்காசி எக்லாதேவியம்மன் கோயிலில் வரும் 24ம் தேதி கொடை விழா நடக்கிறது.தென்காசி அணைக்கரை தெரு எக்லாதேவியம்மன் கோயிலில் வரும் 24ம் தேதி கொடை விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று கால்கோள் விழா நடந்தது. கொடை விழா அன்று காலையில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை, மதியம் உச்சிக்கால பூஜை நடக்கிறது.மாலையில் புனித நீர் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இரவு கொடை விழா சிறப்பு பூஜை வழிபாடு நடக்கிறது.