ஓசூர்: கெலமங்கலம் பட்டாளம்மன் கோவிலில் ஆடி திருவிழா நேற்று துவங்கியது. விழாவையொட்டி, நேற்று காலை பக்தர்கள் தீ சட்டி ஏந்தியும், பால்குடம் ஊர்வலம், சூலம் குத்தியும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஊர்வலத்தில் பங்கேற்றனர். ஊர்வலத்தையொட்டி முக்கிய சாலை வீதிகளில் பொதுமக்கள் சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தன. இரண்டாம் நாளான இன்று (ஜூலை 18) துர்கா தேவி ஹோமம், தேர்வீதியில் அம்மன் ஊர்வலம் ஆகியவை நடக்கிறது. மாலை விளக்கு பூஜை, மஹா மங்களாரத்தி நடக்கிறது. கெலமங்கலம் சுற்று வட்டார பகுதி பக்தர்கள் கலந்து கொண்டர். ஏற்பாடுகளை பட்டாளம்மன் திருவிழா குழு நிர்வாகிகள் செய்துள்ளனர்.