பதிவு செய்த நாள்
28
மார்
2022
10:03
கும்பகோணம்: கும்பகோணம் அருகே, திட்டச்சேரியில் அமைந்துள்ள நான்கு கோவில்களின் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
.தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் தாலுகா, திட்டச்சேரி கிராமத்தில், நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த விசாலாட்சி சமேத விஸ்வநாதர், வேம்பனார் என்ற அய்யனார், மஹா மாரியம்மன், உத்தராபதீஸ்வரர் ஆகிய நான்கு கோவில்கள் அமைந்துள்ளன.இந்த கோவில்களின் திருப்பணிகள், திண்டுக்கல் நடராஜன் குடும்பத்தினர், திட்டச்சேரி திருவரசு மற்றும் கிராமவாசிகளால் செய்து முடிக்கப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
காலை 7:30 மணிக்கு, வேம்பனார் என்ற அய்யனார் கோவிலுக்கும், 8:30 மணிக்கு, மஹா மாரியம்மன் கோவிலுக்கும், 9:00 மணிக்கு, உத்தராபதீஸ்வரர் கோவிலுக்கும், 10:00 மணிக்கு, விஸ்வநாதர் கோவிலுக்கும் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து விசாலாட்சி சமேத விஸ்வநாதர், வேம்பனார், மஹா மாரியம்மன், உத்தராபதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதில், மதுரை மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று, தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை, கோவில் அர்ச்சகர் கீழமாத்துார் கணேஷ் சிவாச்சாரியார், சர்வசாதகம் வெங்கடேச சிவாச்சாரியார் ஆகியோர் நடத்தி வைத்தனர். மாலையில் சுவாமி வீதியுலா நடந்தது.