பதிவு செய்த நாள்
29
மார்
2022
03:03
அன்னூர்: கெம்பநாயக்கன்பாளையம், கருப்பராயன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 3ம் தேதி நடக்கிறது. கெம்பநாயக்கன்பாளையம், நத்தக்காடு கருப்பராயன் கோவில், காடைகுல முன்னோர்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இக்கோவில் வளாகத்தில், பிள்ளையார், நத்த காட்டு கருப்பராயன், கன்னிமார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கும்பாபிஷேக விழா வரும் 2ம் தேதி மதியம் திருவிளக்கு வழிபாடுடன் துவங்குகிறது, மாலையில் முதற்கால வேள்வி பூஜையும், மூல திருமேனிகளை பீடத்தில் வைத்து, எண்வகை மருந்து சாத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும் 3ம் தேதி அதிகாலையில் இரண்டாம் கால வேள்வியும், பேரொளி வழிபாடும் நடக்கிறது. காலை 7:00 மணிக்கு இறைத் திருமேனிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 9:00 மணிக்கு திருமஞ்சனம், பேரொளி வழிபாடு, அன்னதானம் நடைபெறுகிறது. வேள்வி வழிபாடு, தமிழ் முறைப்படி பேரூர், சாந்தலிங்கர் அருள்நெறி மன்றத்தால் செய்யப்படுகிறது. ஏற்பாடுகளை, திருப்பணிக் குழுவினர் செய்து வருகின்றனர்.