ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி காளியம்மன் கோயில் பொங்கல் விழா நான்கு நாட்கள் நடந்தது. விழாவின் துவக்கத்தில் வைகை ஆற்றிலிருந்து திருமஞ்சன நீர் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இரவு மாவிளக்கு பூஜை நடந்தது. பக்தர்கள் பொங்கலிட்டு, தீச்சட்டி, காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் சென்று அம்மனை வழிபட்டனர். விழாவின் நிறைவு நாளில் காளியம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடாகி நகரின் முக்கிய வீதிகள் வழியாக இரவு முழுவதும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயிலில் சிறப்பு பூஜைகளுக்கு பின் அம்மன் பூஞ்சோலை அடைந்தது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் காந்திமதிநாதன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.