பதிவு செய்த நாள்
31
மார்
2022
08:03
திருப்பூர் : திருப்பூர் போலீஸ் லைன் மாரியம்மன் கோவில், பொங்கல் விழா, 29 ம் தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் துவங்கியது.
விழாவில், வரும், 6ம் தேதி கம்பம் நடுதல், 11ம் தேதி அம்மன் கரகம் எடுத்து வருவதல், 12ம் தேதி இரவு அம்மை அழைத்தல், 13 ம் தேதி பொங்கல் மாவிளக்கு, 14 ம் தேதி அம்மன் திருவீதியுலா, 15ம் தேதி மகா அபிேஷகம் - அன்னதானம், 17 ம் தேதி மறுபூஜை நடக்கிறது.பூச்சாட்டு பொங்கல் விழாவையொட்டி, 29ம் தேதி முதல், தினமும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்து வருகின்றன. நேற்று, ஆண்டாள் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். வரும், 17 ம் தேதி வரை, சிறப்பு அலங்கார பூஜைகள் நடக்க உள்ளதாக, விழா கமிட்டியினர் தெரிவித்தனர்.