சித்தலுார் பெரியநாயகி கோவிலில் ரூ.7.94 லட்சம் உண்டியல் வசூல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2022 11:03
தியாகதுருகம் : சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.தியாகதுருகம் அடுத்த சித்தலுார் மணிமுக்தா ஆற்றங்கரையில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசி திருவிழா கடந்த 10ம் தேதி நடந்தது. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.அப்போது, பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தினர். இந்து அறநிலையத்துறை ஆணையர் சிவாகரன் முன்னிலையில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டு எண்ணும் பணி நடந்தது.வரஞ்சரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உண்டியலில் 68 கிராம் தங்கம், 33 கிராம் வெள்ளி, 7 லட்சத்து 94 ஆயிரத்து 149 ரூபாய் காணிக்கை இருந்தது. பணம் கள்ளக்குறிச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.