Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏப்.,2 ஹிந்து புத்தாண்டு: அமெரிக்கா ... இடியும் தருவாயில் ராமேஸ்வரம் கோயில் விடுதிகள் இடியும் தருவாயில் ராமேஸ்வரம் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

07 ஏப்
2022
03:04

மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயில் சித்திரை திருவிழா 2 வருடங்களுக்குப் பிறகு கொடியேற்றத்துடன் துவங்கியது.

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.விழா நாட்களின் போது சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளில் எழுந்தருளிய பின்னர் வீதி உலா நடைபெறும்.கோவில் முன்பாக வைகை ஆற்றில் தினந்தோறும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். வைகை ஆற்றுக்குள் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக ராட்டினங்கள் மற்றும் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக சித்திரை திருவிழா நடைபெறாத நிலையில் இந்த வருடம் சித்திரை திருவிழா இன்று காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.

கொடியேற்றத்திற்காக மண்டபத்திற்கு ஆனந்தவல்லி அம்மன்,சோமநாதர் பிரியாவிடையுடன் சர்வ அலங்காரங்களுடன் கொடி மண்டபத்திற்கு எழுந்தருளினார். இதனை தொடர்ந்து கொடிமரத்திற்கு அர்ச்சகர்கள் 11 வகையான பொருள்களால் அபிஷேகங்கள் செய்த பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., நாகராஜன்,நகராட்சி கமிஷனர் கண்ணன், தலைமை அலுவலர் கணேசன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் 2 வருடங்களுக்கு பிறகு சித்திரை திருவிழா நடைபெற உள்ளதையடுத்து அதிக உற்சாகத்துடன் உள்ளனர். முக்கிய நிகழ்ச்சிளான திருக்கல்யாணம் வருகிற ஏப்.14ம் தேதி காலை 11:00 மணியிலிருந்து 11:30 மணிக்குள்ளும், ஏப்ரல் 15ம் தேதி காலை 10 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன், பரம்பரை ஸ்தானீகம் தெய்வசிகாமணி பட்டர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar