Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தாயமங்கலம் முத்துமாரி அம்மன் கோயில் ... ஏப்.9ல் அமர்நாத் வைஷ்ணவி வாழ்க்கை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லட்சுமி நரசிம்மர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஏப்
2022
05:04

தங்கவயல் : கோவிந்தா கோஷத்துடன் பிரசன்ன நரசிம்ம சுவாமி கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.தங்கவயல், கோரமண்டல், சுவாமிநாதபுரம் மெயின் ரோட்டில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் சுவாமி பிரதிஷ்டாபனம் மற்றும் மஹா கும்பாபிஷேகம், கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் மகேந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பூஜையில் பங்கேற்றனர்.

லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் சுவாமி விக்கிரக பிரதிஷ்டாபனையும், மஹா கும்பாபிஷேகமும் கடந்த 4 முதல், நேற்று வரை நடைபெற்றன.நேற்று காலை 7:30 மணிக்கு சுப்ரபாத சேவை, வேத பாராயணம், பிரதான ஹோமத்திற்கு பின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.அதற்கு முன், 108 கலசங்களை தலையில் சுமந்த படி அர்ச்சகர்கள், மங்கள வாத்தியம் முழங்க கோவிலை வலம் வந்தனர். காலை 10:30 மணிக்கு, கோவிந்தா கோஷம் முழங்க மஹா கும்பாபிஷேகம் நடந்தது.பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் தலைவர் மகேந்திரன் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.கும்பாபிஷேக பூஜைகளை கிருஷ்ணகிரி பரந்தாமன் சுவாமி, திருப்பதி ரகுபட்டர், கோவில் அர்ச்சகர் ராமானுஜம், சிவநாராயணன், குசேலன், இளங்கோ சுவாமிகள் ஆகியோர் செய்திருந்தனர்.நிகழ்ச்சியில் ஏராளமான வைணவர்கள் பங்கேற்றனர். ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் சுபானந்த தாசர் குழுவினரின் ஹரி நாம சங்கீர்த்தனம், மணவாள மாமுனிகள் சபையின் பஜனை, சிவநாராயண அர்ச்சகரின் ஹரிகதை நிகழ்ச்சியும் நடந்தது.இன்று முதல் 48 நாட்கள் மண்டல பூஜையும் நடக்கிறது. தினமும் வேத பாராயணம் ஓதுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar