பாகம்பிரியாள் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2022 12:04
திருவாடானை: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது.கொரோனா பரவலால் 2 ஆண்டுகளுக்கு பிறகு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 8:35 மணிக்கு கோயில் முன் மண்டபத்தில் கொடியேற்றம், குருக்கள் மணிகண்டன் தலைமையில் சிவாச்சார்யார்கள் வேதமந்திரங்கள் முழங்க தீபாரதனை நடந்தன.தேவஸ்தான கண்காணிப்பாளர் செந்தில்குமார், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன், ஊராட்சி தலைவர் கலா பங்கேற்றனர். ஏப்., 11 திருக்கல்யாணம், 15ல் தேரோட்டம், 16ல் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் தாயார் வீதிவுலா நடக்கும்.