ராஜபாளையம்: ராஜபாளையம் தென்காசி ரோட்டில் உள்ள புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா தொடக்கமான நேற்று காலை கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கரம் நடைபெற்றது. கொடிமரத்திற்கு எண்ணை சந்தன காப்புகள் நறுமன பொருட்களால் அபிஷேகங்கள் முடிந்து கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சிக்கு பின் மகா தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். சிறப்பு நிகழ்ச்சியாக ஏப். 16ல் பூக்குழி திருவிழா நடைபெறும். ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் ரவி ராஜா தலைமையில் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.