சின்னாளபட்டி: சின்னாளபட்டி பாரதிநகரில் நாக துர்க்கையம்மன், மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. சாட்டுதலுடன் துவங்கிய விழாவில், விநாயகர், ஆதிசேஷன் சிறப்பு பூஜை, கரகம் பாலித்தல், அம்மன் ஊர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் திருவிளக்கு பூஜை, மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், அக்னிச்சட்டி, பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன், அன்னதானம் நடந்தது. மஞ்சள் நீராடலுடன் அம்மன் கங்கை புறப்பாடு நடந்தது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.