விருதுநகர் : விருதுநகர் மாவட்ட கோயில்களில் ராமநவமி சிறப்பு வழிபாடு நடந்தது.
விருதுநகர் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள ராமர் கோயிலில் ராம நவமியை முன்னிட்டு ஏப். 1ல் கொடியேற்றப்பட்டது. இதையொட்டி ஒன்பது நாட்களும் விஷேச வழிபாடுகள் நடந்தன. ராமநவமியான நேற்று 108 கலசங்களை வைத்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று திருக்கல்யாணம் நடக் கிறது.
அருப்புக்கோட்டை பட்டாபிராமர் கோயில் ராமநவமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பஜனைகள் திரளான பக்தர்கள் , சிவகாசி பெருமாள் கோயில், திருத்தங்கல் நின்றநாராயண பெருமாள் கோயில், ஈஞ்சார் ஆஞ்சநேயர் கோயில், காரியாபட்டி அச்சன்குளம் சீதாராமர் கோயில், செவல்பட்டி பெருமாள் கோயில் ராமநவமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
ராஜபாளையம்: ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதி ராமர் கோயில்களில் ராம நவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடு நடைபெற்றன.பழையபாளையம் ராமசாமி கோயிலில் ஹோமம், அலங்கார, ஆராதனை சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. மாலை அனுமன் வாகனத்தில் ராமர் சீதா லட்சுமணர் வீதி உலா நடந்தது. புதுப்பாளையம் கோதண்ட ராமசுவாமி கோயில், சம்மந்தபுரம் பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.