ராமநாதபுரம் : ராம நவமியை முன்னிட்டு, ராமநாதபுரம் பகுதியில் உள்ள பெருமாள், ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது.
ராமநாதபுரம் சமஸ்தானத்தைச்சேர்ந்த சீதா, லட்சுமணர் சமேத கோதண்ட ராமர் கோயிலில் சிறப்பு அபிேஷகம், அலங்காரத்தில் உற்ஸவர் உட்பிரகாரத்தை வலம் வந்தார். அனுமன், சக்கரத்தாழ்வார், கருடாழ்வார் சன்னதிகளில் அபிேஷக பூஜை நடந்தது. துளசி அர்ச்சனை செய்து பக்தர்களுக்கு அபிேஷக பஞ்சாமிர்தம், தயிர்சாதம் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல அரண்மனை அருகேயுள்ள பால ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிேஷகம் செய்து மலர் அலங்காரத்தில் வடைமாலை சாத்தி தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பங்கேற்றனர்.