உலக நன்மைக்காக தனுஷ்கோடியில் ராமர் தாண்டவம் பஜனை பிரார்த்தனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2022 04:04
ராமேஸ்வரம்: உலக நன்மைக்காக தனுஷ்கோடியில் ஆன்மிக கல்வி மேம்பாட்டு கழகம் சார்பில் ராமர் தாண்டவம் பிரார்த்தனை கூட்டம் நடந்தது.
இலங்கையில் தனுஷ் வியூகம் அமைத்து ராவணனை வதம் செய்து சீதையை ராமர் மீட்டு வந்தார். இதனால் ராமரின் சினம் தணிக்கும் விதமாகவும், சமூக மாற்றத்திற்கு குழந்தைகள் ஆன்மீகம், கல்வி பயிலவும், உலக நன்மைக்காகவும் நேற்று அதிகாலை ஆன்மிக கல்வி மேம்பாட்டு கழகம் சார்பில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் ஏராளமான பெண்கள் கையில் தீபவிளக்கு ஏந்தியபடி ராமர் தாண்டவம் பஜனை பாடி பிரார்த்தனை செய்தனர். இதில் ராமேஸ்வரம் தஞ்சாவூர் பாபா ராஜி போன்ஸ்லே, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் பேராசிரியர் வைத்தியசுப்பிரமணியம், பா.ஜ., ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முரளிதரன், ஆன்மிக கல்வி மேம்பாடு கழக இயக்குனர் மாதுரி, ஒருங்கிணைப்பாளர் ராமநாதன், பசுமை ராமேஸ்வரம் அமைப்பு நிர்வாகி சரஸ்வதி, பலர் பங்கேற்றனர்.