லிங்க வடிவில் கட்டப்பட்ட லிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2022 07:04
வேடசந்தூர்: வேடசந்தூர் பகுதியில், முதல் முறையாக லிங்க வடிவில் கட்டப்பட்ட ஸ்ரீகாசி லிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
கூவக்காபட்டி ஊராட்சி சுப்பிரமணியபுரத்தில் 27 அடி உயரத்தில் சிவலிங்க வடிவில் ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் கட்டும் பணி நடந்து முடிந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் ஏற்கனவே படம், செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது. கட்டுமானப் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று காசி லிங்கேஸ்வரர், விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை மங்கள இசை, விநாயகர் வழிபாடு, யாக வேள்வி களைத் தொடர்ந்து, கலசங்கள் யாகசாலையில் இருந்து கோபுரத்திற்கு புறப்பாடாகி கோபுரத்தில் புனித தீர்த்தம் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. லிங்க வடிவிலான லிங்கேஸ்வரர் கோயில் என்பதால், சுற்றுப் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ காசி லிங்கேஸ்வரர் நிர்வாக குழு சபரிவாசன் ஜமீன்தார், சுகுமார்பாண்டியன், கூவக்காபட்டி ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் செய்திருந்தனர். அன்னதானம் நடந்தது.