பதிவு செய்த நாள்
17
ஏப்
2022
08:04
அனுப்பர்பாளையம்: திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கனகிரியில் புகழ்பெற்ற அருள் மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கந்த பெருமான் கோவில் உள்ளது.
கோவிலில் மக்கள் நல அறக்கட்டளை சார்பில், கோபுரம், கிரிவலபாதை, மின் விளக்கு, குடிநீர், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டது. கிரிவலபாதை அமைக்கப் பட்டதையொட்டி, பவுர்ணமி தோறும் பக்தர்கள் கோவிலில் கிரிவலம் செல்கின்றனர். நேற்று சித்ரா பவுர்ணமியையொட்டி, கிரிவலம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவையொட்டி, மாலை 6.00 மணிக்கு திருப்பூர் சீரானம்பாளையம் ஓம் வேலவன் காவடி குழுவினரின் காவடி ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, கந்தபெருமானுக்கு சிறப்பு பூஜையை நடைப்பெற்றதையொட்டி, கிரிவலம் நடைபெற்றது. இதில் நூற்றுகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் சென்றனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், சிறப்பு விருந்தினர்களாக மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், முதல் மண்டல தலைவர் உமாமகேஸ்வரி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மக்கள் நல அறக்கட்டளை தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி, தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.