பதிவு செய்த நாள்
17
ஏப்
2022
02:04
வேலுார்: சித்ரா பவுர்ணமியையொட்டி வேலுாரில் எட்டு புஷ்ப பல்லக்குகள் விடிய, விடிய ஊர்வலமாக வந்தது.
ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியையொட்டி வேலுாரில் புஷ்ப பல்லக்கு ஊர்வலம் நடக்கும். இதில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிருக்கு பக்தர்கள் பங்கேற்பார்கள். கொரொனாவால் இரண்டு ஆண்டுகளாக புஷ்ப பல்லக்கு ஊர்வலம் நடக்கவில்லை. இந்தாண்டு கொரோனா தளர்வுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் புஷ்ப பல்லக்கு ஊர்வலம் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்தது. இதையொட்டி நேற்று இரவு வேலுாரில் பல்வேறு கோவில்களிலிருந்து எட்டு புஷ்ப பல்லக்குகள் ஊர்வலமாக புறப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள், பொது மக்கள் பங்கேற்றனர்.
வேலுார் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் சார்பில் அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் புஷ்ப பல்லக்கு, வேலுார் அரிசி மண்டி வியாபாரிகள் சார்பில் சேண்பாக்கம் செல்ல விநாயகர் கோவில் புஷ்ப பல்லக்கு, வெல்ல மண்டி வியாபாரிகள் சார்பில் தோட்டப்பாளையம் தாரகேஸ்வரர் கோவிலிலிருந்து தாரகேஸ்வர் உற்சவ மூர்த்திகள் புஷ்ப பல்லக்கு, மோட்டார் வாகன பணிமனை உரிமையாளர்கள் சார்பில் காட்பாடி சாலை விஷ்ணு துர்கை, வெங்கடாஜலபதி கோவிலில் இருந்து விஷ்ணு துர்கை, வெங்கடேச பெருமாள் உற்வச மூர்த்திகள் புஷ்ப பல்லக்கு.
வாணியர் வீதி கனக துர்கையம்மன் கோவிலிலிந்து கனக துர்கையம்மன், விநாயகர் உற்வச மூர்த்திகள் புஷ்ப பல்லக்கு, சலவன்பேட்டை ஆனை குளதச்தம்மன் கோவில் புஷ்ப பல்லக்கு லாங்கு பஜார் புஷ்ப கமிஷன் வியாபாரிகள் சார்பில் வேம்புலியம்மன் புஷ்ப பல்லக்கு புஷ்ப தொழிலாளர்கள் சார்பில் அரசமரப்பேட்டை லட்சுமி நாராயணசாமி கோவில் புஷ்ப பல்லக்குகள் மின் விளக்குகள் அங்காரத்துடன் நேற்று நள்ளிரவு 12:00 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டு ஒன்றின் பின் ஒன்றாக லாங்கு பஜார், அண்ணா சாலை வழியாக ஊர்வலமாக சென்று கோட்டையை அடைந்ததும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று காலை 8:00 மணிக்கு மீண்டும் அந்தந்த கோவிலுக்கு சென்றடைந்தது. வேலுார் ஏ,டி.எஸ்.பி., சுந்தரமூர்த்தி தலைமையில் 8 இன்ஸ்பெக்டர்கள், 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.