அன்னூர் மாரியம்மன் திருக்கல்யாண உற்சவம் பக்தர்கள் பரவசம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஏப் 2022 03:04
அன்னூர்: அன்னூர் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழாவில், நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
அன்னூர் மாரியம்மன் கோவில் 32வது ஆண்டு பூச்சாட்டு திருவிழா கடந்த 5ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கியது. தினமும் மாலையில் சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று முன்தினம் காலையில் அபிஷேக பூஜை நடந்தது. மதியம் சலவைத் தொழிலாளர் சங்கம் மற்றும் திருக்குறிப்பு தொண்ட நாயனார் பேரவை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு அணிக்கூடை எடுக்கும் உற்சவம் நடந்தது. இன்று காலை விநாயகர் கோவிலில் இருந்து பூவோடு ஏந்திய பக்தர்கள் சூழ அம்மன் ஊர்வலமாக கோவிலுக்கு வருகை புரிந்தார். காலை 11:30 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவம் துவங்கி மதியம் 1:30 மணிக்கு முடிவடைந்தது. தாச பளஞ்சிக சேவா சங்கம் மற்றும் ஒக்கலிய மகாஜன சங்கம் சார்பில் விழா மற்றும் அன்னதானம் நடைபெற்றது. மாலையில், பஜனை, செண்டை மேளத்துடன் சுவாமி திருவீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.