பதிவு செய்த நாள்
19
ஏப்
2022
03:04
துாத்துக்குடி : தமிழகம் முழுதும் ஹிந்து சமய அறநிலையத் துறை கோவில்களில், கம்ப்யூட்டர் வாயிலாக டிக்கெட் பெறுவதில் ஏற்பட்டுள்ள பிரச்னையால், பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் உருவாகி உள்ளது.
தமிழகத்தில் அறநிலையத் துறையின் கீழ் ௩௫ ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.தனி சாப்ட்வேர்பெரிய கோவில்களில் அர்ச்சனை சீட்டு, அபிஷேக சீட்டு, சிறப்பு தரிசன சீட்டு உள்ளிட்ட பல்வேறு வகையான சீட்டுக்களை வழங்க, கோவில் நிர்வாகம் சார்பில், தனி சாப்ட்வேர் உருவாக்கி கம்ப்யூட்டர் வாயிலாக சீட்டுகள் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.தமிழக அரசு தேசிய தகவலியல் மையம் எனும், நிக் வாயிலாக ஒரே சாப்ட்வேர் வாயிலாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களில் அர்ச்சனை சீட்டு உள்ளிட்ட அனைத்து சீட்டுகளையும் கம்ப்யூட்டர் வாயிலாக வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக தேர்வு பெற்ற பணியாளர்கள் கோவில்களில் இல்லை. இதனால், கம்ப்யூட்டரில் டிக்கெட் வழங்கும் பணியில் தற்போதுள்ள ஊழியர்கள் திணறுகின்றனர்.
அதோடு, இணைய இணைப்பு சீராக இருந்தால் தான் டிக்கெட் கொடுக்க முடிகிறது. இல்லை என்றால், பக்தர்களுக்கு டிக்கெட் கொடுக்க முடியாத நிலையில் டிக்கெட் கவுன்டர் முன் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், பல்வேறு பிரச்னைகளும் உருவாகி வருகிறது.வருவாய் இழப்புகோவில் பணியாளர்களும் மிக எளிதாக அர்ச்சனை டிக்கெட் வழங்கும் வகையில் பி.ஓ.எஸ்., போன்று எளிதான கம்ப்யூட்டரை வழங்கினால் நன்றாக இருக்கும் என்று பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முதல்வர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரின் கவனத்திற்கு சென்ற பின் தான் அதிகாரிகள் நிக் வாயிலாக இந்த சாப்ட்வேர் அறிமுகப்படுத்தினரா
அல்லது அவர்களாகவே இதனை முடிவு செய்தனரா என்பதும் தெரியவில்லை.டிக்கெட் கவுன்டரில் அதிக கூட்டம் ஏற்படுவதால், டிக்கெட் வழங்க முடியாத நிலையில் அப்படியே கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிக்க வேண்டிய சூழல் ஏற்படுவதால், வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.இதனால், கம்ப்யூட்டர் டிக்கெட் விஷயத்தில் அறநிலையத் துறை அதிகாரிகள் துரிதமாக தீர்வு காண வேண்டும் என பக்தர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.