அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, பெரிய தேர் தயார்படுத்தும் பணி துவங்கியுள்ளது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம், அடுத்த மாதம் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தின், மூன்றாவது பெரிய தேர் என்ற பெருமை பெற்ற தேர், கோவில் வளாகத்தில் தகர ஷெட்ட மூடப்பட்ட நிலையில், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தற்போது, தேரோட்டத்துக்கு தேரை தயார்படுத்தி, அலங்காரம் செய்யும் பணிக்காக, தேர் ஷெட்டை பிரிக்கும் பணி நேற்று துவங்கியது. கோவில் நிர்வாகத்தினரிடம் கேட்ட போது, தேர்த்திருவிழாவுக்காக தேர் தயார்படுத்தும் பணி துவங்கியுள்ளது. விழாவை ஒரு நாள் நடத்துவதா, இரு நாள் நடத்துவதா என்ற குழப்பம் இருப்பதால், தேரோட்டம் நடத்தப்படும் தேதியை உறுதிபட கூற முடியாது என்றனர்.