கும்பகோணம் – காரைக்கால் சாலையில் அமைந்திருக்கும் கோனேரிராஜபுரம் சிவன் கோயிலில் உள்ள நடராஜர் கைகளில் ரேகைகள், கால்களில் நரம்புகள் தத்ரூபமாக இருப்பதை காணலாம். இவரை துாரத்தில் இருந்து பார்க்கும் போது முதியவராகவும், அருகில் சென்று பார்த்தால் இளைஞராகவும் காட்சி தருவார்.