நடராஜரின் வடிவத்தில் உலகில் நடைபெறும் ஐந்தொழில்களை காணலாம். * படைத்தல் – அவரது மேல் வலது கையில் உள்ள உடுக்கையின் ஒலி. * காத்தல் – அவரது கீழ் வலது கையில் உள்ள அபய கரம். * அழித்தல் – அவரது இடக்கையில் உள்ள அக்னி. * மறைத்தல் – அசுரனான முயலகன் மீது ஊன்றிய பாதம். * அருளல் – அவரது துாக்கிய இடது பாதம்.