பதிவு செய்த நாள்
27
ஏப்
2022
03:04
தேவகோட்டை: தேவகோட்டை சத்குரு ஸ்ரீ தியாகம் பிரும்ம ஆராதனை 175 வது ஆண்டு விழா சங்கரர் கோயிலில் நடந்தன. முதல் நாள் ராமச்சந்திர மூர்த்தி, சத்குரு தியாகராஜர் படங்கள் ஊர்வலமாக எடுத்து வந்து கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து சென்னை ஆடிட்டர் நடராஜன் தலைமையில் ஆராதனை விழா தொடங்கியது. உற்சவ கமிட்டி தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றார். இணை செயலாளர் பாலசுப்பிரமணியன் பக்தி பாடல் பாடினார். செயலர் எஸ். ராமசாமி அறிக்கை படித்தார். துணை தலைவர் சீனிவாசன் அறிமுக உரையாற்றினார். ஜமீன்தார் சோமநாராயணன், பிச்சப்பன் பேசினர். செயலர் கே. ராமசாமி துரை நன்றி கூறினார். ஆறு நாள் விழாவில் நீலாயதாட்சி பஞ்சரத்ன கீர்த்தனை, பத்மா பாட்டு, அஜித் கிருஷ்ணன் புல்லாங்குழல் இசை, கோபாலகிருஷ்ணன் பாட்டு, மகாலட்சுமி குழுவினர் பாட்டு, பிரணவ் குழுவினர் பாட்டு, மாதவ், அம்பிகா பிரசாத் வயலின், சங்கரசுப்பிரமணியன் , அஸ்வின் ஸ்ரீதரன், தியாகராஜன் , மிருதங்கம், சேகர், கிருஷ்ணமூர்த்தி கஞ்சிரா , சவந்தர்யலட்சுமி மோர்சிங் ஆகியோர் இசை நிகழ்ச்சிகள் நடந்தன. தினமும் திவ்யநாமம் பஜனை , பூஜைகள் நடைபெற்றன.