பதிவு செய்த நாள்
27
ஏப்
2022
03:04
நாமக்கல்-பரமத்தி சாலை இ.பி., காலனியில், மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், சித்திரை திருவிழா, கடந்த, 10ம் தேதி பூச்சாட்டு தலுடன் துவங்கி நடந்து வருகிறது. நேற்று, காலை, சுவாமி தேரில் வலம் வரும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து, காலை, 10:00 மணிக்கு, சுவாமியை தேரில் வைத்து வீதி, வீதியாக கொண்டு சென்றனர். அவர் களுடன், மின்வாரிய கேங்மேன் குமரேசன், 27, சென்றார். தேர் மீது அமர்ந்திருந்த குமரேசன், மின்சார வயர்களை கையால் துாக்கி விடும் போது, மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். அப்போது தேரில் உள்ள துணிகளும் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. படுகாயம் அடைந்த கேங்மேன் குமரேசனை, பொதுமக்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். தேரோட்டத்தையொட்டி, மின்சாரத்தை ஆப் செய்த நிலையில், எப்படி சப்ளை வந்தது என்பது குறித்து, மின்வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். மின்வாரிய ஊழியருக்கு மின்சாரம் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.