திருப்புல்லாணி: தினைக்குளம் அருகே மொங்கான் வலசை கிராமத்தில் உள்ள காந்தாரி அம்மன் கோயிலில் முளைக்கொட்டு உற்ஸவ விழா நடந்தது. கடந்த ஏப்., 19 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. பெரிய ஊரணிக்கரை திட்டு காளியம்மன் கோயிலிலிருந்து ஊர்வலமாக காந்தாரியம்மன் கோயில் வரை இளநீர் காவடி, அக்னிச்சட்டி, பால்குடம், அலகு குத்தி நேர்த்திக்கடன் உள்ளிட்டவைகள் நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை மொங்கான்வலசை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.