* ஏழ்மையில் வாடும் சகோதரர்களுக்கு கைகொடுங்கள். * பிறருக்கு கொடுங்கள். உங்களுக்கும் கிடைக்கும். * ஏழைகளுக்கு உதவுங்கள். விண்ணகத்திற்கு செல்வீர்கள். * உங்களது இரக்கச் செயல்கள் ஆண்டவர் முன் சென்றடைகின்றன. * நன்மை செய்யவும், பகிர்ந்து வாழவும் மறவாதீர்கள். * வெற்றி பெற நல்லவரின் ஆலோசனையை கேளுங்கள். * முட்டாளின் பார்வைக்கு அவனது வழி சரியாகவே தோன்றும். * உண்மையை பேசினால் சுதந்திரமாக இருக்கலாம். * பிறர் இல்லாதபோது அவரைப்பற்றி பேசாதீர். * பிறருடன் சண்டையிட்டு உங்களின் மதிப்பை குறைத்துக் கொள்ளாதீர். * பொய் பேசி சேர்க்கும் பொருள் காற்றாய் பறக்கும். * சகிப்புத்தன்மை உள்ளவர்களிடம் மன அமைதி இருக்கும். – பொன்மொழிகள்