தன்னை பற்றி எல்லோரும் உயர்வாக மதிக்க வேண்டும் என பலரும் எண்ணுகின்றனர். இதே நேரத்தில் பிறர் தவறாக ஒரு வார்த்தை சொன்னால் போதும்.. கோபம் தலைக்கேறுகிறது. காரணம் பிறர் என்ன சொல்ல வருகிறார் என்பதை கேட்கக்கூட பொறுமையில்லை. எதற்கும் அவசரம். எதிலும் அவசரம். நம்மிடம் என்ன பிரச்னை உள்ளது. அதை எப்படி திருத்திக்கொள்ளலாம் என யாரும் சிந்திப்பதில்லை. நாம் அனைத்திலும் சரியாக உள்ளோம். பிறர்தான் சரியில்லை என எண்ணி தவறுகளை செய்கிறோம். இப்படி இருப்பவர்கள் முதலில் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கு தீர்வுதான் என்ன என்று யோசிக்கிறீர்களா.. உங்கள் மனதை முதலில் கவனியுங்கள். செயல்களில் நிதானம் ஏற்படும். முகத்தில் பொலிவு கூடும். கண்களில் ஒளிமிகும். உங்களிடம் என்ன பிரச்னை இருக்கிறது என்று உங்களுக்கே தெரியவரும்.