குன்னுார்: நீலகிரி மாவட்டத்தில் ஈகை திருநாள், ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் தராவியா எனும் தொழுகையுடன் ரம்ஜான் நோன்பு துவங்கியது. 30 நாட்கள் நோன்பு இருந்த இஸ்லாமிய மக்கள் நோன்பு கஞ்சி வழங்கினர். பிறை தென்பட்டதை தொடர்ந்து ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. குன்னூரில் வண்டிப்பேட்டையில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு, மோர்ஸ் கார்டன் அருகே ஈத்கா மைதானத்தை அடைந்தது. அங்கு பெரிய பள்ளிவாசலில் இமாம் வாசிம் அக்ரம் தலைமையில், சிறப்பு தொழுகை நடந்தது. சின்ன பள்ளிவாசல் இமாம் மன்சூர்அலி தாவூதி ரமலான் சிறப்புரை நிகழ்த்தினார். அருகில் கபர்ஸ்தானில் முன்னோர்களின் அடக்க ஸ்தலத்திற்கு சென்று பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து கட்டி தழுவி ரமலான் வாழ்த்து தெரிவித்தனர்.