ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம் கதிர்நரசிங்கபுரம் காளியம்மன் கோயில் பொங்கல் விழா நடந்தது. விழாவின் துவக்க நிகழ்ச்சியாக நாட்டாமை வீட்டில் இருந்து அம்மன் கரகம் எடுத்து நல்ல தண்ணீர் கிணற்றில் அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் பொங்கலிட்டு, மாவிளக்கு ஏற்றி பூஜை செய்து வழிபட்டனர். அம்மன் ஊர்வலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர். ஆண்டிபட்டி ஓடைத்தெரு முனீஸ்வர சுவாமி கோயில் பொங்கல் விழா 3 நாட்கள் நடந்தது. வைகை அணையில் சுவாமி கரகம் எடுத்து ஆண்டிபட்டியில் ஊர்வலம் சென்றனர். பக்தர்கள் காவடி, பால்குடம், தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். முளைப்பாரி ஊர்வலம் சிறப்பு பூஜைகளுக்கு பின் சுவாமி பூஞ்சோலை அடைந்தது. இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.