தென்திருப்பதியில் பரிவேட்டை: குதிரை வாகனத்தில் மலையப்பசுவாமி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2026 04:01
மேட்டுப்பாளையம்; தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி கோயிலில், பரிவேட்டை குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ஸ்ரீ மலையப்பசாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையத்தில், பிரசித்தி பெற்ற தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி கோயில் உள்ளது. இங்கு இன்று மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கோசாலையில் பராமரிக்கப்படும் பசுக்களுக்கு, பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின் மாடுகளுக்கு பொங்கல், பழங்கள் வழங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீமலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீ நாராயணகிரி பங்களாவில் எழுந்தருளினார். பின் குதிரை வாகனத்தில் புறப்பட்டு பரிவேட்டை மைதானம் வந்தடைந்தார். அங்கு மலையப்ப சுவாமி பரிவட்டையில் ஈடுபட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.