பொதுவாக சிவன் கோயிலில்தான் வில்வார்ச்சனை நடைபெறும். ஆனால் பெருமாள் கோயில் ஒன்றிலும் வில்வார்ச்சனை நடைபெறுகிறது. தஞ்சை மாவட்டம், பாப நாசம் நகர மத்திய பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீபங்கஜவல்லித் தாயார் உடனருளும் ஸ்ரீசீனிவாசப் பெருமாள் கோயில். பெரிய மதிற்சுவர், பெரிய பிராகாரத்துடன் உள்ள கோயில். தாயாருக்குத் தனிச்சன்னிதி, ஆண்டாளுக்குத் தனிச்சன்னிதி உள்ளது. ஸ்ரீஹயக்கிரீவர் உள்ள தலங்களில் இது முக்கியமான தலம். ஏழு வெள்ளிக்கிழமைகள் பங்கஜவல்லித் தாயாருக்கும், பெருமாளுக்கும் பக்தர்கள் வில்வத்தாலும் தாமரைப் பூவாலும் அர்ச்சனை செய்கிறார்கள்; உத்திர நட்சத்திர அபிஷேகமும் நடைபெறுகிறது.