மைசூரு – மங்களூரு சாலையில் 4 கி.மீ., துாரத்திலுள்ள விஜய்நகரில் யோகநரசிம்மர் கோயில் உள்ளது. காரணமற்ற பயம் போக்கும் தலமான இங்கு அமாவாசையன்று சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அப்போது சுவாமியின் வலது கால் கட்டை விரலை தரிசித்தால் மனக்கலக்கம் தீரும். கருவறையில் சாளக்கிராம கல்லால் ஆன நரசிம்மர் குத்துக் காலிட்ட நிலையில் கைகளைத் தொங்கவிட்டபடி அமர்ந்திருக்கிறார். சுவாமியின் வலதுகால் கால் கட்டை விரலில் அதர்வண வேதம் அடங்கியிருப்பதால் இங்கு வருவோருக்கு தீயசக்திகள் நெருங்காது, மாதம் தோறும் அமாவாசையன்று 300 லிட்டர் பால், 300 லிட்டர் தயிரால் அபிஷேகம் செய்கின்றனர். எதிரி பயம் தீரவும், வழக்கில் வெற்றி கிடைக்கவும் அமாவாசை அபிேஷகத்தில் பக்தர்கள் பங்கேற்கின்றனர்.