நமசிவாய, சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரங்களை கோயில்களில் காது குளிரக் கேட்கலாம். ‘சிவ’ என்றால் ‘மங்களம்’ என்பது பொருள். ‘சிவ சிவ’ என்று மனம் ஒன்றி சொன்னால் கொடிய பாவமும் பறந்தோடும். மனத்துாய்மை உண்டாகும். சிவனை வணங்க காசிக்குப் போக வேண்டாம், கங்கையில் மூழ்க வேண்டாம், திருவண்ணாமலை தீபத்தை தரிசிக்கவில்லையே என நினைக்க வேண்டாம். மனதார ‘சிவசிவ’ என்ற மந்திரம் சொல்லி அருகிலுள்ள கோயிலில் வழிபட்டால் போதும்... எல்லா நன்மையும் உண்டாகும்.