பதிவு செய்த நாள்
17
மே
2022
05:05
காரைக்குடி: காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயில் தேரோட்டம் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெறுகிறது.
கொப்புடையநாயகி அம்மன் கோயில் திருவிழா மிகப் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். இந்தாண்டு திருவிழா, இன்று கடந்த மே 10 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினம்தோறும் அம்மன் சிம்ம, காமதேனு, அன்ன, ரிஷப, குதிரை, வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. 8 வது இன்று காலை 8.13 மணிக்கு மேல் திருத்தேருக்கு அம்பாள் எழுந்தருளளும், மாலை 5 மணிக்கு தேரோட்டமும், தொடர்ந்து காட்டம்மன் கோவிலுக்கு அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை, அம்மன் கோயிலுக்கு திரும்புதல் நிகழ்ச்சியும், 10 வது நாளில், யானை வாகனத்தில் அம்மன் எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு தெப்பத் திருவிழாவும், அதிகாலை புஷ்ப பல்லாக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. காட்டம்மன் கோயிலுக்கு செல்லும் சாலை சேதம் அடைந்துள்ள நிலையில் அதனை சரி செய்யும் பணிகள் நடந்து வருகிறது. சாலைப் பணிகளை மாங்குடி எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.