பதிவு செய்த நாள்
17
மே
2022
05:05
சூலூர்: சூலூர் அத்தனூர் அம்மன் கோவிலில் நாளை திருக்கல்யாண திருவிழா நடக்கிறது.
சூலூர் மார்க்கெட் ரோட்டில் உள்ள அத்தனூர் அம்மன் கோவில், 1,400 ஆண்டுகள் பழமையானது. இங்கு, 29 வது ஆண்டு திருவிழா, கடந்த, 3 ம்தேதி சாமி சாட்டுதலுடன் துவங்கியது. மே 10 ம்தேதி அக்னி கம்பம் நடப்பட்டது. தினமும் அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடினர். இன்று இரவு 8:00 மணிக்கு பண்டார வேஷமும், அம்மை அழைத்தலும் நடக்கிறது. நாளை காலை, 9:00 மணிக்கு, நொய்யல் ஆற்றில் இருந்து அம்மனை அழைத்து வரும் நிகழ்வு நடக்கிறது. பெண்கள், தீர்த்தக் குடம், பால் குடம் எடுத்து வருகின்றனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் மற்றும் திருக்கல்யாண திருவிழா நடக்கிறது. நாளை மறுநாள் மஞ்சள் நீராட்டு விழா மற்றும் திருவீதி உலா நடக்கிறது.