Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாயமான முனீஸ்வரன் சிலை ... அய்யனார் கோயில்களில் புரவி எடுப்பு திருவிழா அய்யனார் கோயில்களில் புரவி எடுப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்சுபேட்டை திரவுபதியம்மன் கோவிலில் அர்ச்சுணன் தபசு விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பஞ்சுபேட்டை திரவுபதியம்மன் கோவிலில் அர்ச்சுணன் தபசு விமரிசை

பதிவு செய்த நாள்

21 மே
2022
05:05

காஞ்சிபுரம் : பெரிய காஞ்சிபுரம், பஞ்சுபேட்டை பாண்டவ சமேத திரவுபதியம்மன் கோவில், அக்னி வசந்த விழாவையொட்டி, அர்ச்சுணன் தபசுமரம் ஏறி தவம் புரியும் நிகழ்ச்சி நடந்தது.

பெரிய காஞ்சிபுரம், பஞ்சுபேட்டை பாண்டவ சமேத திரவுபதியம்மன் கோவிலில், அக்னி வசந்த உற்சவம் கடந்த, 4ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தொடர்ந்து, பகல், 2:00 மணிக்கு முத்துகணேசன் சொற்பொழிவாற்றி வருகிறார். தேவராசன் கவி வாசித்து வருகிறார். கடந்த, 15 முதல், இரவு, 9:00 மணிக்கு, குண்டையார் தண்டலம் மாரியம்மன் தெருக்கூத்து நாடக சபாவின், மஹாபாரத தெருக்கூத்து நாடகம் நடந்து வருகிறது. இதில், நேற்று காலை, அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதில், அர்ச்சுனன் தனது எதிரிகளை கொல்ல, பகலி என்று சொல்லக்கூடிய, வில் வற்றாக, அம்பை சிவனிடத்தில் வாங்குவதற்காக, 40 அடி உயர தபசு மரத்தில், இடது காலால் ஊன்றி, வலது காலை துாக்கி, கண்களை மூடி, கைகளைக் கூப்பி, வேண்டிக்கொண்டு மேலே ஏறி தவம் புரியும் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. விழாவில், பஞ்சுபேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். வரும், 25ல் காலை துரியன் படுகளமும், மாலை தீமிதி விழாவும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அருள்மிகு பாண்டவ சமேத ஸ்ரீதிரவுபதி அம்மன் இறைபணி அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 
temple news
பல்லடம்: ஆறாக்குளம் கிராமத்தில், அம்மா சோறு, ஆத்தா சோறு என்று, மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் சிவ நகர் சிவாலயத்தில், 17ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசையை ஒட்டி மகா சிவ 108 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மதுரை ஐராவதநல்லூர் ஓம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar