திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் திருக்கோஷ்டியூர் நம்பிகள் திருநட்சத்திர மஹோத்ஸவம் துவங்கியது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் ராமானுஜரின் குருநாதர் திருக்கோஷ்டியூர் நம்பிகளின் சன்னதி உள்ளது. அவர் அவதரித்த நட்சத்திரமான வைகாசி ரோஹிணியை முன்னிட்டு திருநட்சத்திர மகோத்ஸவம் நடைபெறுகிறது. பதினொரு நாட்கள் நடைபெறு்ம் இந்த மகோத்ஸவம் நேற்று மாலை துவங்கியது. நம்பிகள் சன்னதியிலிருந்து வெள்ளிப் பல்லக்கில் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து இன்று காலை, மாலை இ ருவேளகைளில் புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து தினசரி மாலையில் புறப்பாடு நடைபெறும். மே 28 ல் குதிரைவாகனத்தில் புறப்பாடும், மே 29 காலையில் தேர், மாலையில் திருமஞ்சனமும், மே 31ல் இயற்பா சாற்றுமுறையும் நடைபெறும்.