திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2022 02:05
காரைக்கால்: காரைக்காலில் கோடை விடுமுறை முன்னிட்டு சனீஸ்வரபகவான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார்.நவகிரக ஸ்தலங்களில் சனிபரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது.இதனால் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் அதிகம் வருகின்றனர். தற்போது அனைத்து பள்ளிகளில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் பெறும் ஆவதிப்பட்டு வரும் நிலையில் நேற்று திருநள்ளார் சனீஸ்வரபகாவன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகாலையிலிருந்து அதிகமாக காணப்பட்டது.மேலும் கோவில் நிர்வாகம் கோடை விடுமுறையை ஒட்டி அதிக அளவில் பக்தர்கள் வருவதால் அவர்கள் தாகம் தணிக்கும் வகையில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
வரிசையில் வரும் பக்தர்கள் சற்று இளைப்பாறி செல்லும் பொருட்டு தற்காலிக நிழற்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் நலன் கருதி ஆலய உட்பிரகாரங்களில் கூடுதல் மின்விசிறி மற்றும் குளிர்சாதன வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தாய்மார்கள் வசதிக்காக பிரத்யேகமாக பாலூட்டும் தனி அறைகள் தேவஸ்தான வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.மாற்று திறனாளிகள் அவரது உதவியாளருடன் சுவாமி தரிசனம் செய்வதற்கும் வரிசையில் வரும் பக்தர்களுக்கும் விரைவாக சுவாமி தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.எனவே பக்தர்கள் எந்தவித சிரமமின்றி சனிஸ்வரபகவானை தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.