Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் 2 ... புஷ்ப அலங்காரத்தில் பிரித்தியங்கிராதேவி அருள்பாலிப்பு புஷ்ப அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரூர் மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா : குவிந்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கரூர் மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா : குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

24 மே
2022
03:05

கரூர் மாரியம்மன் கோவிலில், வைகாசி திருவிழாவையொட்டி, ஏராளமான பக்தர்கள் நேற்று நேர்த்திக்கடன் செலுத்த குவிந்தனர். கரூரில் பிரசித்தி பெற்ற, மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த, 8ல் கம்பம் நடுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து வரும், 13ல் பூச்சொரிதல் விழா, 15ல் காப்பு கட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. பின், நாள்தோறும் பல்வேறு விசேஷ வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடந்து வருகிறது.

நேற்று முதல், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி தொடங்கியது. குறிப்பாக, கரும்பு தொட்டிலில் குழந்தைகளை படுக்க வைத்து, ஏராளமான தம்பதிகள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று காலை, 7:00 மணிக்கு கோவில் தேரோட்டம் நடக்கிறது. அதை தொடர்ந்து, மாவிளக்கு ஊர்வலம், பால்குட ஊர்வலம், அக்னி சட்டி எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடக்க உள்ளது. நாளை மறுநாள் மாலை, 5:30 மணிக்கு, கம்பம் ஆற்றுக்கு செல்லுதல் நிகழ்ச்சி நடக்க உள்ளது. மேலும் வரும் ஜூன், 2ல் பஞ்ச பிரகாரம், 3ல் புஷ்ப பல்லக்கு, 4ல் ஊஞ்சல் உற்சவம், 5ல் அம்மன் குடிபுகுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நம் மன இருட்டை நீக்கி, தெளிவு என்கிற வெளிச்சத்தை வாழ்வில் ஏற்றும் ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியை இன்று ... மேலும்
 
temple news
திருமலை: திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான நேற்று இரவில், ஸ்ரீ மலையப்ப ... மேலும்
 
temple news
பழநி: பராபவ ஆண்டு ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.பழநி முருகன் கோயிலில் பராபவ ஆண்டு ... மேலும்
 
temple news
வழக்கமாக புரட்டாசியில் வரும் சரஸ்வதி பூஜை இந்த ஆண்டு ஐப்பசியில் வருகிறது. வீணையோடு காட்சி தருபவள் ... மேலும்
 
temple news
சென்னை: ஆயுத பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துக்களை  முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar