அவிநாசி: சென்றயாப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அவிநாசி வட்டம்,குப்பாண்டம்பளையம் கிராமத்தில் வைணவத் தலங்களில் பழமைவாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சென்றயாப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
குப்பாண்டம்பளையம் கிராமத்தில் அமைந்துள்ள சந்திர குல தெய்வம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சென்றயாப் பெருமாள் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா, நேற்று காலை நான்காம் கால பூஜைகள், மங்கள இசை, சாந்தி மற்றும் ப்ரான ப்ரதிஷ்ட ஹோமம் உள்ளிட்ட நிகழ்சிகளை தொடர்ந்து க்ரகப்ரீதி, யாத்ராதானம் உடன் நம்பெருமாள் உபநாச்சியாருடன் திருக்குடங்கள் கோவிலை வலம் வந்து, ஸ்ரீ சென்றயாப் பெருமாள் விமான கோபுரங்களுக்கு, மஹாஸம்ப்ரோஷணம் நடைபெற்றது. இதனையடுத்து, தசதானம், தசதரிசனம். உபசார பூஜைகள் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிசேக விழாவில் சுற்றுப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.