சோழவந்தான்: சோழவந்தான் ஆலங்கொட்டாரம் மங்கள காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஜூன் 12ல் யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. நேற்று காலை 2ம் கால யாக பூஜையை தொடர்ந்து சிவாச்சார்யார்கள் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். ஏற்பாடுகளை கிராம மக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.