அன்னூர்; அன்னூர் அய்யப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னூர் தென்னம்பாளையம் சாலையில் உள்ள அய்யப்பன் மற்றும் விநாயகர் கோயிலில் கடந்த இரு மாதங்களாக 3000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை சென்று வருகின்றனர். இங்கு ஒவ்வொரு மாதமும் அய்யப்பன் பிறந்த நட்சத்திரமான உத்திர நட்சத்திரம் அன்று சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. இந்த மாதம் நேற்று முன்தினம் இரவு அய்யப்பனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அலங்கார பூஜை நடந்தது. அய்யப்பன் கோயில் உட்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.