பதிவு செய்த நாள்
14
ஜூன்
2022
04:06
வில்லிவாக்கம், :வில்லிவாக்கம் தாமோதர பெருமாள் கோவில் குளம் சீரமைப்பு பணிக்காக, 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்க உள்ளன.சென்னை, வில்லிவாக்கத்தில் அமைந்துள்ள சவுமிய தாமோதர பெருமாள் கோவில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற இக்கோவில் குள படிக்கட்டுகள், கடந்த பருவமழையின் போது சேதமடைந்தன.இதனால், பிப்ரவரி மாதம் நடந்த மாசி மாத தெப்ப உற்சவம், நிலை தெப்ப உற்சவமாக நடந்தது. தற்போது, குளத்தை சீரமைக்க அறநிலையத் துறையால் டெண்டர் விடப்பட்டு, 20 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் துவக்கப்பட உள்ளன.இதனால், குளத்தில் உள்ள மீன்களை அருகில் உள்ள அகத்தீஸ்வரர் கோவில் குளத்தில் மாற்றி விடும் பணிகள் நடக்கின்றன. இன்னும் 15 நாட்களில், குளத்தில் சீரமைப்பு பணிகள் துவங்கப்பட உள்ளதாக, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.